அநாதை

=========
யாருமற் றோரில்லை யிங்கநாதை வாழவோர்
ஊருமற் றோருமல்ல, ஒர்துன்பம் – நேருமெனில்
சொல்லா லடித்துச் சுயவஞ்சந் தீர்ப்போரால்
எல்லா மிருந்தும் எதுவுமற்றோ ராருமே
உள்ளத்தா லிங்கனாதை யே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Jul-18, 2:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 101

மேலே