நம்பிக்கை இழந்த நீ
நம்பிக்கையின்
ஒளிவட்டம் உள்ளுர
உதயமாகும் நேரம்
கடவுளை மறந்து
கடமை செய்யும்
நீ
உன் நம்பிக்கை
உடையும் போது
மட்டும் ஏன்
கடவுளை நாடுகிறாய்?
லாபத்தை கண்டு மகிழ்ந்து
எல்லாம் தனக்கு
என்கிறாய்.
இழப்பு ஏற்படக் கண்டு
இறைவா என்று
கதறுகிறாய்.
வருவது வரட்டும் என்ற
துணிவு உன்னில்
இல்லை.
உனக்கென்று உன்னத
கொள்கை ஏதுமில்லை.
சத்தியத்தை நீ மறந்தே
ஜெகத்தை ஆளவே
விரும்புகிறாய்.
கடவுள் எதிர்பட்டால்
அவரைக் கொன்றே
கடவுளாக நீ எண்ணம்
கொண்டாய்.
அதனால் நீ காணும்
இடமெல்லாம் இருந்தும்
காண இயலாது அறியாமையில்
உலாவுகிறாய்.
பயம் உன்னை பீடிக்கும்
பிணியாக இனி பாதாளமே,
உன் இருப்பிடம்.
எங்கும் இருளாக குருடான
கண்களோடு ஒளி
தேடியே அலைகிறாய்.......