வேலையில்லா பட்டதாரி
வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரி...
நேர்காணல்களில் வாழ்க்கையை தேடுபவன்...
கனவுகளோடு போராடிக்கொண்டு இருப்பவன்...
தகுதியிருந்தும் தகுதியற்றவனாக சுட்டிக் காட்டப்படுபவன்...
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உயர்வுகளைத் தேடுபவன்...
மனதைரியத்தால் மனஉளைச்சல்களை உடைத்தெறிபவன்...
கண்ணீரையும் அவமானத்தையும் சுமந்துகொண்டு திரிபவன்...
சவால்களை துரத்தி திசையெங்கும் செல்பவன்...
உள்ளக்கனல்களில் முன்னேற்ற தீயை அணையவிடாமல் காப்பவன்...
நேர்வழி செல்லும் வாஞ்சையை நேர்மையால் கட்டி வைத்திருப்பவன்...