வெற்றி பெறுவதன் நோக்கம்

வெற்றி... வெற்றி... வெற்றி...
என்று சொல்லும் போதே,
வெற்றி...
தோல்வி... தோல்வி... தோல்வி...
அது தோற்கும் போதே,
வெற்றி...
மூன்றெழுத்து மந்திரம்
அடைய - வேண்டும் தந்திரம்
வெல்வது இங்கே சாத்தியம்
வென்றால் மட்டுமே சரித்திரம்
முயன்றால் கிடைத்துவிடும்
விழுந்தால் விலகிவிடும்
விடியல் வந்துவிடும்
வெற்றி பெற்றால் தானே...
வெற்றி பெறுவதன் நோக்கமென்ன...
மனிதன் வாழ்வதே அதற்கு தானே...
தாய்மை அடைகையில் பெண்ணின் வெற்றி
தந்தை ஆகயில் ஆணின் வெற்றி
தள்ளாடி எழுகையில் வென்றான் வெற்றி
ஓட்டத்தில் தானே போல்டின் வெற்றி
ஓய்வில் தானே பெற்றோரின் வெற்றி
ஓடுவதில் தானே மானின் வெற்றி
ஓசையில் தானே நதியின் வெற்றி
ஓருயிரில் தானே காதலின் வெற்றி
தானே... தானே... வெற்றிதானே...
எல்லாம் இங்க வெற்றிதானே...
முயன்றால் கிடைப்பது வெற்றிதானே...
முயலை வென்றது ஆமைதானே...
விதியை வென்றது விடாமுயற்சி தானே...
வெற்றி பெறுவதன் நோக்கமென்ன...
மனிதன் வாழ்வதே அதற்கு தானே...
இலக்கே இல்லா இப்பயணம்,
பயணித்து என்ன பிரயோஜனம்...
நன்றி
அசாருதீன் அன்வர்தீன்