தமிழோடு வாழ்வு
இதனை இவ்வாறு
செய்திடல் நன்றெனச்
சொல்லும்
தமிழன் பண்பாடு.. அதனை
தமிழில் பண் பாடு...
தொலையாத
ஓலைச் சுவடிகளோடு
தொலைந்து போன
ஓலைச் சுவடிகளும்
தமிழ் வளர்த்திருக்கும்...
அண்ணனைத் தம்பி
முந்திட முடியாது
ஒருக்காலும் வயதில்...
தமிழைப் பிறமொழி
முந்திட முடியாது
ஒருக்காலும் வளத்தில்...
பல்லவ தேசத்துச் செய்யுள்
பாண்டிய நாட்டிற்கும்
பாண்டித்தமிழ் பல்லவத்திற்கும்
அதற்கும் முன்பும்
தினத்தந்தி இல்லாமலேயே
பரவியிருந்த காலம் தொட்டு...
இன்று மடிக்கணினியில்
விரல்கள் தொட்டு...
தமிழ் வளர்க்கும் மனித
தெய்வங்கள் நினைத்து
நண்பர்கள் அனைவருக்கும்
காலை வணக்கம்...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍😀🌹💪🙋🏻♂🙏