மணல் வீடு
என் மனதில் ஓர்
மழைக்காடு
அதன் நடுவே கரையாத ஓர்
மணல் வீடு
இருட்டிய காட்டில்
நிலவு தொங்கும் வானம்
மணல் வீட்டின் உள்ளே
அணையாது எரியும்
ஓர் மெழுகுவர்த்தி
சிறு ஒளி கொடுத்து
தன்னை இழந்து
கொண்டிருக்க
அங்கே நீ நான் எனும்
இரு மானிட உடல்கள்
உயிரை பறிமாறிக் கொண்டிருக்க
காதல் எனும் போர்வைக்குள்
கண்மயங்கி உறங்கிக்
கொண்டிருக்கக் கண்டேனடி...!!