உன் காதலை மட்டும்

கம்பன் கையாளாத
கவி நீயா?
வள்ளுவன் புகழாதா
குறள் நீயா?
கார்கால மேகங்கள் உன் கூந்தலில் மறைந்திருக்கும்
கன்னிகை நீயா?
கண் சிமிட்டில் உலகை
கரைத்தாலும் கயல் விழி நீயா ?
முட்டாள் கவிஞன் நானே...
உன்னைப் புகழ பொய் புகழ்ந்தேன்...
மெய்யெல்லாம் மவுனம் கொண்டது
என்னவளே...
எதிர்மறை உண்டா
உனக்கு?
யாவை வேண்டுமானாலும்
நான் கொடுப்பேன்
உனக்கு
உன் காதலை மட்டும் கொடு
எனக்கு.

எழுதியவர் : சண்முகவேல் (26-Jul-18, 3:29 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : un kaadhalai mattum
பார்வை : 470

மேலே