காதல் காதல் காதல்
நம் இருவரின் கண்கள்
எழுதும் கவிதை
இதுவரை யாரும்
அச்சடிக்காத கவிதை
நீயும் நானும்
உச்சரிக்கும் கவிதை
புது உலகையே
சித்தரிக்கும் கவிதை
காலத்தின் கோளத்தால்
பிரிந்தாலும் கூட
காத்திருக்கும் கவிதை
விழியோடு கண்ணீர்
பூத்திருக்கும் கவிதை
மடியோடு உயிராய்
சாந்திருக்கும் கவிதை
நித்திரையிலும்
கைகூடிருக்கும் கவிதை
அசையாது போனாலும்
இதயத்தில் பத்திரமாயிருக்கும்
கவிதை
நம் கண்கள் எழுதும் கவிதை
பார்வைகள் பிண்ணி பிண்ணி
பிணையும் கவிதை
எழுத்துகள் அங்கும் இங்கும்
துள்ளி ஓடும் கவிதை
காதல்....காதல்....காதல்.....!!!