சில துளி ஞாபக மழை
உன்னை மட்டுமே
அணு நேரமும் முழு தினமும்
நினைத்துக் கொண்டிருக்கும்
நெஞ்சத்தை நனைக்குதடி
சில துளி ஞாபக மழை!
என்றோ ஓர் நாள்
பெயரே தெரியாத
திரைப்படம் ஒன்றின்
கடைசி காட்சியை
பார்த்திடும் போது
காதலன் ஒருவன்
தன் கை கால்கள்
இரத்த வெள்ளத்தில்
தோய்ந்திருக்கும்
போதும் தன் காதலின்
மானத்தை காக்க
தூப்பாக்கி தோட்டாவால்
அவளின் நெஞ்சை துளையிட்டு
கொன்றான் ஆனால் அந்த
தோட்டா முதலில் துளையிட்டது
அந்த காதலனின் நெஞ்சைத் தான்
அப்போது ஒரு தோட்டா
இரு உயிரை துளைத்தது
தன் காதலன் மடியிலேயே
அந்த காதலி தன் உயிரை
இழந்தாள் கன்னத்தில்
ஒரு சின்ன சிரிப்போடும்
கண்ணில் முட்டும் கண்ணீரோடும்
காதலன் விழி பார்த்தே
சரிந்து விழுந்தாள்
காதலியை மரணத்திலும்
பிரியாது அந்த காதலன்
அவளை தன் நெஞ்சோடு
சேர்த்தணைத்தே இறந்தான்
அந்நேரம் இயற்க்கை ஒரு நொடி
அசையாது நின்று அந்த
உண்ணத காதல் ஜோடிக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்தியது
ஆழ்கடலும் அலையடிக்க மறந்து
ஆழ்ந்த இரங்கள் தெரிவித்தது
தூரத்தில் இரு தென்னை மரம்
சோகப் பார்வை வீசியது
வானத்தில் பறந்திடும்
பறவைகள் இந்த காதல் ஜோடிகளை கண்டு தன்
கூட்டுக்குள் வாழ வந்த
தன் ஜோடியை இறுக்கி
அணைத்து ஏதோ ஒரு
பயத்தில் நடுங்கின
இதைக் கண்டு
கண்களின் ஓரத்தில்
கண்ணீர் வழிந்தோடக்
கண்டேன் நெஞ்சத்தில்
ஏனோ வலி கொண்டேன்..!
அவ்வப்போது அக்காட்சியை
மறந்துவிட்டேன் இருந்தாலும்
சில நேரம் நினைவில் வந்து
அந்த காட்சிகள்
என் நெஞ்சை நனைத்துவிட்டு
செல்லும் சில துளி ஞாபக மழையாக...!
இப்போது உன்னை மட்டுமே
அணு நேரமும் முழு தினமும்
நினைத்துக் கொண்டிருக்கும்
நெஞ்சத்தை நனைக்குதடி
அந்த சில துளி ஞாபக மழை..!
அந்த காதல் ஜோடி
இணைந்தே இறந்தார்கள்
நாமும்
அணு தினமும்
இணைந்தே வாழ்ந்து
இனிதே வாழ்ந்து முடித்து
மடியோடு மடி சாய்ந்து
இதயங்கள் இடம் மாற
இறந்திட மாட்டாமோ
என்றே என்னை
நினைக்க வைத்து
சென்றது அந்த
சில துளி ஞாபக மழை....!!!!