காதல் தீ
என் விழி வழியே
உன் விழி உரசி செல்ல
உன் பார்வை தீ
என்னுள் பற்ற வைத்தது
காதல் தீயை!!!
சுடர் விட்டு எரிந்தும்
சாகவில்லை நான்!
உன் பார்வை தீ
எனக்கு உயிர்கொடுத்ததால்!!
தீ மூட்டி குளிர்காய்ந்தும்
ஏனோ, என் உள்ளம் மட்டும்
குளிர்ந்தே உள்ளது
உன் நினைவலைகளால்..!