கனவே என் கணவா
தொண்டைக்குழியில்
சிக்கி கொண்டு சாகிறது
உன் நினைவும் ..................!
என் உணவும் ...................!!
விக்கவும் இல்லை
என் உணவு ....................!!!
விலகவும் இல்லை
உன் நினைவு .........!!!!
அக்கமும் பக்கமும்
ஆயிரம் உறவுகள்
இருந்தும் .........!!!!
பாராது பகல் பொழுதிலும்
வருகிறது உன் கனவு...!!!!
நினைவுகளால்
உடலெங்கும் வேர்க்கிறாய் நீ...!!
நெஞ்சத்தை முழுவதும்
பேயாக பிடித்து பிசைகிறாய் ......!!!
உணர்வுகளால்
உயிரின் காம்புகளில்
நிரம்பி நிரம்பி
நித்தம் நித்தம் வழிகிறாய் ....!!!!
கடவுளின் வரம் நீ
கனவே என் கணவா.....!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
