கரிச மண்ணில் பூத்த கருவாச்சிக்கு

கரிச மண்ணில் பூத்த கருவாச்சிக்கு

கரிசல் மண்ணில் பூத்த கருவாச்சி -என்
காதல் முழுசும் உனக்காச்சு !

கன்னிப்பொண்ணு உன்னைப்பார்த்து
ரெம்பவே நாள் ஆச்சு !

கவிதை ஒன்னு எழுத தான் ரெம்ப ரெம்ப யோசிச்சு
என் மனசு முழுக்க உன் நினைப்பு நிறைஞ்சாச்சு !

காலையில குளத்துல தண்ணி எடுக்க நீ வருவேன்னு
கால் கடுக்க உன் மாமன் காத்திருந்து காத்திருந்து
என் காலெல்லாம் வலிச்சு தான் போச்சு !

கருவாச்சி உன் முகம் தான் என் கண்ணுக்குள்ள பொத்தி வச்சு
இரா முழுக்க தூக்கம் கெட்டு தூக்கத்த உன் மாமன் தொலைச்சாச்சு !

கடைக்கண் பார்வை ஒண்ணு அப்போ அப்போ பார்ப்பியே
அப்போவே உன் உசுரு உனக்குதான்னு முடிவாச்சு !

கத்திரிபூ பூ போட்ட கண்டாங்கி சேலை ஒண்ணு கட்டிக்கிட்டு
கச்சிதமா தச்ச மார்பு கச்சையும் கவுந்த தலையுமா
நடந்து வர அழக பார்க்க ஆசைதா இப்பெல்லாம் கூடிப்போச்சு !

ஊரெல்லாம் இப்போ என்னவோ
உன்னைப்பத்தியும் என்னப்பத்தியும் தான் ரெம்ப பேச்சு !

உன் மாமன் ஆசையா வாங்கி வச்சிருக்க
தாலிய உன் கழுத்துல நான் கட்டிபுட்டா நான் விடுவேன்
நிம்மதி பெருமூச்சு !

கரிசல் மண்ணில் பூத்த கருவாச்சி -என்
காதல் முழுசும் உனக்காச்சு !

எழுதியவர் : கவிஞர் முபா (27-Jul-18, 7:58 pm)
பார்வை : 755

மேலே