பேப்பர்
கருக்கு வானத்தில்
வெளி வருகிறான் பகலவன்
வெட்கி வெட்கி கதவண்டையில் இருந்து
வெளி வரும் பெண்ணென.
வாசலின் முகத்தில்
வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது ஓவியம்.
உடலினை சில்லென ஸ்பரிசித்து
ஓடுகின்றன நீர்த்துளிகள்.
நாற்றம் கமழ்கின்றது
அடுப்பில் இருக்கும் கொட்டைவடிநீர்.
நானும் போய்தான் ஆக வேண்டும்
செய்தித்தாள் விநியோகத்திற்கு ..
கண்முன் வந்துக் கொண்டிருக்கிறான்
இப்போது உறங்கி கொண்டிருக்கும் என் தமையன் ..
" அம்மா பேப்பர்..."