மாற்றில்லா மரணம்
தலைக்கணத்தால் தானென்று கர்ஜித்த குரல்கள் இன்று காணாது போனது ஏனோ?
கடவுள் கடவுளென்ற அகந்தையில் தலைகால் புரியாது ஆடினால் இருந்த இடம் தெரியாது ஒடுக்க இயற்கை துணியும்.
கடவுளுக்கே அந்நிலை என்றால் சாதாரணமான சிறுவன் நான் தலைக்கணத்தில் ஆடலாமோ?
தானாக போகிற ஜீவனை தடியெடுத்து அடிப்பதும் குற்றம்.
தானாக போகிற ஜீவனை இழுத்து நிறுத்த முயற்சிப்பது குற்றம்.
இயற்கையில் உள்ளவர்கள் அனைவரும் மரணமில்லாமல் வாழ்ந்தால், அவர்களுக்கு பிறந்தவைகளுக்கு பிறந்தவைகளுக்கு பிறப்பவை எங்கே போகும்?
புலன்களை அடக்கி எங்களுக்கு சந்ததியினர் வேண்டாமென்று வாழ்விடுவரோ?
இந்த தர்க்கம் இயற்கையான மரணம் பற்றியது.
அழுது புரண்டாலும் மாண்டார் திரும்புவரோ? என்ற சித்தனின் கேள்வி இடையறாது சிந்தையில் ஆழ்ந்த நடமாடாமல் பிறர் ஆதரவில் வாழும் வாழ்வும் ஒரு நரகம்.
செய்தவை கணக்கெடுக்கும் தருணம்.
அழுது பயனில்லை என்னும் போது கண்களில் வறட்சி ஏற்பட்டுவிடுகிறது.
மரணங்களை சந்திக்காத ஒரு குடும்பத்தைக் காட்டுங்கள்.
எங்கு தேடியும் கிடைக்காது.
வழிவழியான மரணங்கள் எத்தனையோ உணர்ந்த போதிலும் பாழும் மனம் அடம்பிடிக்கிறது.
கவலை கொண்டு வாழும் நாட்களை நரகமாக்கிறது.
ஆழ்ந்த இரங்கல் என்பதே நாம் இறந்த பிறகு பிறர் நமக்காக உபயோகிக்கும் வாக்கியமாக இருக்கும்.