சமதர்மம்

ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன,
அவற்றை மேய்ப்பனே கொன்று தின்பதற்காகத் தான் நல்லா கொழு கொழு புற்களை காட்டிவித்து உண்பிக்கிறான் என்பதை அறியாமலே...

ஆடுகள் நல்ல பசுமையான புற்களைத் தின்று மகிழ்ச்சியாக சதை பற்று கொண்டவையாக கொழுத்து வளர்க்கின்றன,
மேய்ப்பனே தன்னைப் பலியிடுவான் என்பதை அறியாமலே.

மேய்ப்பனின் நோக்கமறிந்த ஒரு ஆடுமட்டும் மெலிந்து நலிவடைகிறது.
அந்த நோஞ்சன் ஆட்டின் மேல் மேய்ப்பனின் பார்வை கணிசமாகிறது.
கூர்ந்து கவனித்தவன், " சோம்பேறி ஆடே ஒழுங்காக சாப்பிடுகிறாயா? இல்லையா? ",என்று பார்வையாலே மிரட்டுகிறான்.

மிரட்டல்களுக்கு பயந்து தின்று கொழுத்த ஆடுகள் ஓன்றன்பின் ஒன்றாக பலியிடப்படுகின்றன, உயிர்வதை கூடாது என்று உன்னதமாக பேசி கொள்கை பரப்பியவர்களின் இலைகளில் உணவாக அலங்கரீப்பதற்காக...

அதே மேய்ப்பனை சிங்கம் ஒன்று வேட்டையாடிக் கொன்றது,
அங்கே கதறல்கள் பிண்ணனியாய் ஊடகங்கள் விமர்சிக்க,
ஆடுகளின் உயிரென்றால் இழிவாம்,
மனித உயிரென்றால் பெரிதாம்,
இது மனிதர் எழுதிய தர்மமே.
இறைவன் எழுதிய தர்மமே சர்வ உயிர்களும் பாகுபாடில்லாமல் நடத்தப்படுகின்றன,
பிறப்பு முதல் இறப்பு வரை...
பிறந்த எவ்வுயிரும் இறப்பது உறுதி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Jul-18, 11:35 am)
பார்வை : 938

மேலே