ஏனடி தோழி
=============
திருமணம் என்னும் திறந்த சிறைக்குள்
=தெரிந்தே நுழைந்து திருமதி என்று
வருகிற பெயரில் வசீகரம் கொண்டு
=வாழ்க்கை முழுதும் வடிக்கிற கண்ணீர்
அருவியில் குளிக்கும் அரிவையர் தங்கள்
=அகத்தில் இருக்கும் அல்லலை மறைத்து
எருமையை போலே இல்லற வயலை
=ஏனடி இங்கே உழுகிறார் தோழி?
௦௦௦