எங்கே அவள்

எங்கே அவள் ?
நான் கொடுத்த ஒரு ரூபாய்க்கு
நான்கிரண்டு மாங்காய் துண்டுகளோடு
அன்பையும் சேர்த்து கொடுத்த
அவள் எங்கே போனாள்?
பள்ளியின் முகப்பில் கடை விரித்து
மணியின் ஒலிப்பிற்காக தவம் கிடந்த
அவள் எங்கே ?
படித்த பள்ளியினை
கடந்து சென்ற பொது
முன் வந்த அம்மூதாட்டியின் முகம்
விட்டு சென்றது கேள்விகளையும் கூட
அந்த மாங்காயின் சுவை
நெஞ்சில் இன்னும்...

எழுதியவர் : பா.நிபி (28-Jul-18, 1:31 pm)
சேர்த்தது : பா நிபி
Tanglish : engae aval
பார்வை : 39

மேலே