அஞ்சேன் அஞ்சேன்
அஞ்சேன், அஞ்சேன்,
கூட்டம் கண்டு அசரேன்,
கூட்டணி கண்டு பதறேன்,
எதிர்பட இறைவன் வந்து நெற்றிக்கண்ணை திறப்பினும் உள்ளம் நாடி உணர்ந்ததை உள்ளபடி உரைப்பேன்.
பிடித்தால் பழகு.
பிடிக்காவிடில் விலகு.
புலியென்றும், யானையென்றும்,
சிங்கமென்றும்
வாளெடுத்து தலை சீவுவேனென்றும் பயமுறுத்தப் பார்க்காதே.
பயப்படுபவன் நானல்ல.
அஞ்சேன், அஞ்சேன்,
அணு ஆயுதம் தாக்கினும் அஞ்சேன்,
அஞ்சேன், அஞ்சேன்,
துப்பாக்கிகள் சூழவந்து சுட்டு வீழ்த்தினும் அஞ்சேன், அஞ்சேன்,
நயவஞ்சக நாக்கின் சுடுசொற்களைக் கேட்டு அஞ்சேன், அஞ்சேன்,
அன்பாய் அருகே வந்து ஆயுதத்தால் முதுகில் குத்தினும் அஞ்சேன்,
அரசனென்றும் அரசாங்கமென்றும் மண்டியிட்டு அடிபணிய வைக்க வந்தாலும் அஞ்சேன், அஞ்சேன்,
இரகசியமாய் உணவிற் விஷம் கலந்து அளிப்பினும் அஞ்சேன், அஞ்சேன்,
நானே கடவுளென்போர் முன் மண்டியிடேன்.
காப்பாற்று, காப்பாற்று என்று அஞ்சி நடுங்கேன்,
இது அகந்தை அல்ல,
அஞ்சாமை.
எவனுக்கும் நான் பயப்பட வேண்டும்?
அஞ்சாமை எனது பிறப்புரிமை,
அச்சுறுத்த வருபவன் நெஞ்சனை பிளந்து இதயத்திலே உள்ள பிறரை அஞ்சி நடுங்க வைக்கும் கெடுதிமிகு எண்ணத்தை நசுக்கி தீயிலிட்டு எரிக்கவும் அஞ்சேன்... அஞ்சேன்...