ஓ கயவனே

கூட்டை விட்டு
வானம் பார்க்க புறப்பட்ட
ஓர் பெண்பறவை
இன்னும் வீடு திரும்ப வில்லை!!
அவ்வெள்ளை உள்ளத்தின் மேல்
ஓர் !
ஒரு தெருநாயின்
உதிர ரேகைகள்
பதிந்தன!!!!!
அவளின்
மையுண்ட கண்களில்
மயக்கத்தைத் தெளித்தனர்!
மருதாணி படர்ந்த கைகளில்
மிருகத்தின் நக கீறல்கள்!!!

என்னகுற்றம் புரிந்தாள் அவள்?
பெண்ணாய்ப்பிறந்தது ஓர் குற்றமா??
அன்றி
வானம் பார்த்தது குற்றமா??
ஒருவன்
அமிலம் ஊற்றி அழித்திட முனைகின்றான்!!
இச்சைக்குஉடன்படாப்பெண்ணினை
கழவன் சிலர்
எண்ணைஊற்றிஎரிக்கின்றான்!!
மறுபக்கம் காதலேனும் பெரில் காமம்!!
ஓடும்பேருந்திலேபலாத்காரம்!!
குப்பையில் வீசி யெறியும் ஓர் அவலம்!
இல்லையோர் முடிவேதும் இவற்றுக்கே!!
ஏழுவகைப் பருவத்தில் எப்பருவமும்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!!

ஓ கயவனே!!
மார்கழி மாதத்து
நாய்களைப் போல்
அலைகின்றாயே!!
இங்கு
ஒருவன் மட்டுமல்ல கயவன்!
உலகில்உள்ளனர் பலர் இவனைப் போல்!
பெண்கள் அவன் கையிலோர்
விளையாட்டு பொம்மை!!
ஆடி முடித்தபின்
வீசிஎறிந்திடுவார் வீதியிலே!!
செதமுற்ற பொம்மை
சேர்ந்திடுமா மீண்டும் பழைய நிலையை?????

எழுதியவர் : புவபாரதி (29-Jul-18, 12:38 pm)
பார்வை : 420

மேலே