பண்ணிருக்கு எனோ பயம்

கண்மணி வாராய் கவிவனைய லாமிங்கே!
பண்ணிசைத்(து) ஒன்றாகப் பாடலாம்! - பெண்ணுனக்கு
வெண்பாட்(டு) எனவழைக்கும் வெண்பா வியற்றிடப்
பண்ணிருக்கு ஏனோ பயம்.
(பண் - தகுதி என்ற பொருளில்)

தம்புரா வோடு தபலாவும் வந்தாச்சு;
சும்மாவோர் பாட்டு சுருதியொடு - தெம்பாக
வண்ணத்தில் பாடு! வயலினுடன் நல்லழகு
பண்ணிருக்கு! ஏனோ பயம்?

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Aug-18, 1:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 56

மேலே