அவள் கண்கள்

கண்ணிற்கு மை அழகு
இவள் கண்ணின் இமைக்கு
இயற்கையே தந்த பொலிவும்
கருமையும் மையிட்டது போல் காண்கின்றதே
கண்ணை மலரோடு சேர்ப்பர்
கன்னி இவள் கண்கள்
அலர்ந்த தாமரையாய் காண்கின்றதே
தாமரைக்கு தனி மணமுண்டு
மெல்லிய இதம் தரும் மணமது
என்னவள் இவள் கண்கள்.............
பார்வையோடு மணமும் சேர்க்குதே
என் மனதை கிரங்கவைத்து
இவள் என்னோடு பேசும்போதெல்லாம்
இவள் கண்களும் அபிநயம் புரியுதே
சில நேரம் என்னைப்பார்த்து இவள்
நாணி கோணி தலைகுனிந்து
தரையில் கால் கட்டை விரல்கொண்டு
கோலம் இழைக்க இவள் கண்கள்
காட்டும் பாவத்தில் மானல்லவோ காண்கின்றேன்
இவள் நிமிர்ந்து மெல்ல தலையை என்பக்கம் திருப்பிட
நேராக நிமிர்ந்து இவள் என்னை பார்க்கையில்
நவரசங்கள் இவள் கண்களில் பேச
இதை ஓர் காவியம் ஆக்கிடலாம் என்கிறது
இந்த கவிஞனின் கைகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Aug-18, 9:20 am)
Tanglish : aval kangal
பார்வை : 895

மேலே