அதிகாலைக் கனவும் நெனவும்
சேவல் கூவிட
குயிலும் பாடிட
கோவில் மணி ஓசைக்கு கேட்டிட
காகங்களும் கரைந்திட
ஜன்னல் வழியே வந்து
பரிதியின் இளங் கிரணங்கள்
கால்களை வருடியும்
தூக்கத்திலிருந்து கண் விழிக்க
எனக்கோ இசைவில்லை
இன்னும் கண்ணை மூடிக்கொண்டே
இருக்கின்றேன்.......கனவாய்
வந்தது விடியற்காலை
அவள் வாசலில் கோலம் போட்டு
சாணத்தில் பூசணிப்பூ வைத்து
பூபாளத்தில் ராகம் இசைத்து
அப்போதுதான் குளித்து
அள்ளிமுடித்து கட்டிய கூந்தல்
இழைகள் முகத்தில் விழ
நெற்றியில் குங்குமப் பொட்டு.....
மங்கள மங்கையை என்முன் நிற்கிறாள்
தூக்கத்தைவிட்டு நான் இன்னும்
இந்த காட்சியைவிட்டு விலகிட
மனம் இல்லாது..............
காலை வெளிச்சம் காலில்
சுரீரென்றது ............
பால்காரன் வாசலில் பால் என்றான்
விழித்துக் கொண்டேன்
எதிர் வீட்டில் அவள் என்னவள்
என் காதலி ....இப்போது
நிஜமாகவே கனவில் கண்டதுபோல்
மார்கழி மாத திருப்பாவை வாயில்
பூபாளத்தில் பாடி , கோலமிட்ட கையோடு
திரும்பி பார்க்க ............என் பார்வை
அவள் பார்வையோடு சேந்தது...
இருவரும் புன்னகைக்க
அதிகாலை காதல் விருந்து.......
..