கனவை குதறிய சொற்கள்

குதித்து விழுந்த அக்கனவில்
நீ எழுந்ததை மட்டும்
அது பாராமல் கலைந்தது.
தென்பட்டது ஒன்றுதான்.
காதரகு கதுப்பு முடிகளில்
காற்று நெய்த வளையங்கள்.
பேசுதல் அற்று கிடந்தோம்.
உயிரோடு உயிராக...
இரவின் சிறகுகள்
பனியை தைத்தவண்ணம்...
இது இன்னொரு கனவா?
உன் கனவில் நானா...
என் கனவில் நீயா...
ஓடி ஓடி சுழன்றது ஒன்றுதான்.
வார்த்தைகள் சிந்திப்போட்ட
முடிந்த கவிதையின்
முற்றுப்புள்ளியின் சோகம்.
உன் இமையால் பெருக்கு.
போகட்டும் இக்கவிதை.
தோளில் சாய்ந்து கொள்ளடி
முதல் நாள் காதல்
மீண்டும் வரட்டும் இன்று
வெட்டவெளியில் துள்ளும்
கன்றுக்குட்டியாய்...

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Aug-18, 6:48 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 78

மேலே