அவன்-நான்
என்மீது நீ கொண்ட காதல்
என்னை கிறங்க செய்கிறது
என் உடம்பெல்லாம் புல்லரிக்க
பேசும்போதெல்லாம் நீ
ஒரு கவிஞனாய் அல்லவோ ஆகிவிடுகிறாய்
அப்பப்பா அப்படியொரு காதல்
கவிதை மொழி என்மீது பொழிகிறாய்
நாம் சந்திக்கும் வேளையெல்லாம்
இதில் எத்தனை மெய்மொழி
எத்தனை வெறும் கற்பனையே
என்பதை நான் மட்டும் அறிவேன்
என்றாலும் அது நீ என்மீது வைத்திருக்கும்
காதலின் இன்ப அதிர்வு நானறிவேன் என்னவனே
இப்படியே நம் இளமை வாழ்ந்துவிட்டால்
ஹும்..............இல்லையே
இல்லையே முதுமை ஒரு நாள் வரும்
இளமைத்தோற்றமெலாம் மாறும்
அப்போதைக்கு இப்போதே நான் கேட்கின்றேன் என்னவா
அழகு மறைந்த பின்னும் என்மீது
உன் அன்பு மாறாதிருக்குமா சொல்வாய்......
சொல்வாயா என்னன்பே சொல்வாயா ..............
அதற்கு அவன் சொன்னான்...................
ஒன்றுமட்டும் தப்பாது தயங்காமல்
இப்போதே சொல்வேன் 'ஒரு காலும்
என்னன்பு உன்மீது கடுகளவும் குறையாது
அழியும் இவ்வழகு இருக்கும் வரை
அதை நான் புகழ்ந்தாலும் ...........அதில்
என் காதல்தான் முன்னிருக்கும்
முடிவுவரை உன்மீது என்னன்பு ஒருபோதும்
மாறாது, மாறாக மோகம் காமம் கடந்த
அன்பாய் உன்மீது உனக்கு காவல் தரும்
இது சத்தியம், சத்தியம் ' என்றான்.
இன்னும் எனக்கு என்ன வேண்டும்
வாழ்வில் இது ஒன்றே போதுமடா என்றேன்