கொடுத்துவைத்த தண்ணீர்

உன் உச்சியில் விழுந்து
கன்னத்தில் உரசி
தோள்களில் இறங்கி
முதுகில் சாய்ந்து
கூந்தல் நுனியில்
சொட்டிக்கொண்டு இருக்கும்
நீர் துளிகள்.....
நீ
தலை துவட்டுகையில்
கீழே விழுந்து
உயிர் விடுகிறதே!
உன்னை தொட்டு விட்ட சந்தோஷத்தில்
என்னை ஏளனமாய் பார்த்தபடி ......