நட்பு

நல்லோரைத் தேடி கண்டு
நாடிப்போய் அவரை
நண்பராய் அடைந்து -அவர்
கூறும் நெறி முறையில்
வாழ்ந்திட வழி வகுத்து
அதன்படி வாழ்ந்திட்டால்
வாழ்வில் என்றும் உயர்வே
இதையறிந்து உய்வோம்
உயர்வோரின் நட்பை
யாண்டும் இடும்பை இலா
வாழ்கைகைத்தரும் அதுவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Aug-18, 7:32 am)
Tanglish : natpu
பார்வை : 651

மேலே