இயற்க்கை மகள்

ஆணும் பெண்ணுமாய் கலந்தவர்கள்
உயிர்வளர்ச்சியில் உன்னதங்கள்
ஆண்பாலும் ஏற்கவில்லை
பெண்பாலும் ஏற்கவில்லை
யார்தான் ஏற்பார் அவர்களை..?
வீட்டைவிட்டு வந்தாலும் பாசம் தீராது
வீட்டிலே நடத்தவசவுகள்
சொல்லிமாளாது
கனவுகளெல்லாம் கலைந்துப்போனது
தன்நம்பிக்கையோ கருகிப்போனது
காலையும் மாலையும் வந்துப்போனதில்
காபியாவது கிடைக்குமா!? என்றானது
வயிறுமுட்ட ஆசையில்லை
வயிற்றுப்பசி ஆற்றவே உணவில்லை
களவு செய்யவும் மனமில்லை
கலவி செய்யவும் நாட்டமில்லை-இங்கு
வேறு வேலைத்தர ஆளுமில்லை..!
ஆதால்,
கலவியில் கலக்கிறேன்..!
வேலைத்தருவோர் யாரேனுமுண்டா..?
-நேமா
(திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்)

எழுதியவர் : நேமா (5-Aug-18, 2:00 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 70

மேலே