நீயே நானானால் என்றும் எனதானால்

ரோஜா மலரெடுத்து இதழ்களில்
செந்நிறம் பூசவா
சிரிப்பில் சிதறும் முத்துக்களை
மாலையாய்க் கோர்க்கவா
விழிக் குளத்தில் நீராடும்
கயல்மீனாய் மாறவா
செவிகள் மகிழும் இனிமைக்
கீதம் இசைக்கவா
அழகை மறைக்கும் படர்குழலை
பின்னாலே திசைமாற்றவா
மேனியில் மணக்கும் பூமுல்லைக்
காற்றாய் நான்வீசவா
உன்னிதய வீட்டுக்கோர் காதல்
சாசனம் எழுதவா


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (5-Aug-18, 2:17 pm)
பார்வை : 168

மேலே