கலைஞர் -தமிழ்த்தொண்டன்

அடுக்கடுக்கு மொழியாலே,
தமிழுக்கு,
ஆலிங்கனம் செய்தவனே!
எம்மொழியைச் செம்மொழியாய்
உலகறிய வைத்தவனே!
உன்
செங்கோலின் திறன் நிகராய்
சிலரேனும் பிறந்து வரலாம்!
மைகோலின் மாட்சிக்குத்தான்
மண்ணில் இணை ஒருவருண்டோ?
அரசியலில் விமர்சனங்கள்
ஆயிரங்கள் வைக்கலாம்!
அருந்தமிழில் குறைசொல்ல
இயலாதென்பதே நிதர்சனம்!
சிலம்பிற்குத் திரைச்சீலை
வடிவம் தந்தவனே!
பராசக்தி படைப்பினிலே
பகுத்தறிவு ஈந்தவனே!
உன்
தமிழ்கடல் வங்கத்தில்
சங்கமம் ஆகட்டும்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (8-Aug-18, 3:03 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 177

மேலே