வீர வணக்கம்

வள்ளுவன் வகுத்த முப்பாலுக்கும் ஒப்பில்லா

தமிழ் தாயின் தவப்புதல்வனே

தமிழை செம்மொழியாக்கியவனே

தமிழர் நெஞ்சத்தில் நீங்க இடம் பெற்றவனே

கருணையும் நீதியையும் பெயரில் கொண்டவனே

உன் வாய் பேச்சால் வாழ் வீச்சும் தோற்குமே

எழுதுகோலை ஆயுதமாக்கி எதிரியை வீழ்த்தியவனே

உன் வசனங்களை உச்சரிக்காத திரை உலகமா

உன் குரல் கேட்காத தமிழகமா

தோல்விகள் வந்தாலும் துவண்டுவிடாத உள்ளமே

எதையும் தாங்கும் இதயமே

அண்ணாவின் தம்பியே

எங்கே சென்றாய் எங்கள் விழிகளில் கண்ணீரை கசியவிட்டு

தேசத்தின் சொத்தே உனக்கு வீரவணக்கம்

இன்னொரு பிறப்பெடுப்பாய் மீண்டும் தமிழனாய்

வையகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும்

- கோவை உதயன் .

எழுதியவர் : (10-Aug-18, 3:52 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : veera vaNakkam
பார்வை : 66

மேலே