கலைஞர் கருணாநிதி எனுமொரு ஆலமரம்

சிறு புள்ளி விதை தான் நீயும் விதைக்கப்படும்முன்,
இரு இலை வெடித்த முலையில் தெரிந்தது அது ஆளப்பிறந்த
ஆலமரம் என்று ,.
ஆலமென்றாலும் , வளர்கையில் வழக்கம்போல் சிறு செடிதான் ,
விதையூன்றியது யாரோ என்றாலும் , வேரூன்றியது நீதான் ,
மெல்ல மெல்ல வளர்ந்து விழுதுன்றியதும் நீதான் ,
மண்ணுக்கும் உனக்குமான பந்தம் ,
காற்றுக்கும் உனக்கும் சொந்தம்,
யாரறிவார் நீ வளர்கையிலே ?.

மேலெழுந்து விரிந்து படர்ந்து
நிலம் சூழ்ந்து நிற்கையில் தான்
எல்லோர்க்கும் குறுகுறுப்பு ....

புயலொன்று புரட்ட நினைத்து ,
சிறு கிளை ஒடிக்க ,
பல் விழுதுகள் வீரியமாய் தாங்கிநிற்க,
பல வெள்ளம் சூழ்ந்து வேரறுக்க துடித்தும்... தோற்றன ,
பாவம் உன் வேர்ப்பாய்ந்த தூரம் தெரியாமல் ...
கடும் வெயில் சுட்டெரித்தும்,.
சில இலைகள் சருகாக,
பல பல இலைகள் பசுமை பந்தலிடும்.

எண்ணிட முடியுமா ?
எத்தனை மனிதர்கள் இளைப்பாறி சென்றார்கள் .
கணக்கிட முடியுமா ?
காக்கையோ குருவியோ , பல்லுயிர் பறவையோ
கூடுகள் பல கட்டியதும், குஞ்சிகள் பல இட்டதும் ..

வஞ்சம் , சூழ்ச்சி , துரோகம் , பொறாமை என
உன்மீது வீசப்பட்ட கழிவுகள்
அனைத்தையும் நீ வேரிலிட்டு
மரித்து., செரித்து உரமாக்கி
வீரியமாய் வளந்து நின்றாய் .

உன் ஒற்றை மர சாதனையால்
வனக்கூட்டம் வெட்கி நிற்கும்.

இடர்பாடு பல கடந்து ,
பல காலம் வெற்றிசுமந்து ,
இறுதியில் இயற்கையிடம் சரணடைந்தாய்.

பெருமரம் ஒன்று மரித்தாலும்,
அதன்தடமெங்கும் தரணியிலே !

எழுதியவர் : (10-Aug-18, 4:29 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 41

மேலே