ஆறுதல்கள் ஆயிரம்
சூர்யோதயம் காண்கையில்
என் கரம் பிடித்து யாரோ
ஆறுதல் சொல்வதாய் உணர்கிறேன்!
மாலை நேர மஞ்சள் கதிர் காண்கையில்
என் மன விரிசல்களில் எல்லாம்
மருந்திடப்படுவதாய் உணர்கிறேன்!
கதிர் ஆயிரம் என்னைத் தீண்டுகையில்
என் கோடிக் கோடி அணுக்களிலும்
ஒளிப்பூக்கள் பூப்பதாய் உணர்கிறேன்!
கடல் அலைகளில் ஏறி
கதிர் ஒளி எனை நோக்கி
பவனி வருகையில்,
பெருமூச்சு விட்டு எழுகிறேன்!
புது வேகம் கொண்டு என்
போராட்டங்களைத் தொடர்கிறேன்!
ஆறுதல்கள் ஆயிரம்
ஆதவன் உருவில் அந்த
ஆகாயத்தில் உலவக் காண்கிறேன்!