அத்தான் விடைபெறுவான்

(இரு தோழிகளுக்குள்ளான கவிதை பாடல்)

தோழி 1 :
கதிரவன் தோற்று போனான் உன் முகச்சிவப்பில்
கரணம் அதிர்ந்தே கேட்டேன் ஆனந்த வியப்பில்

தோழி 2 :
முன்மாலை நேரத்தில் மாமன் வந்தான்
முழுநிலவு மறையும் வரை முத்தங்கள் தந்தான்

தோழி 1 :
முழுமதி கரையும் வரை வெறும் முத்தம் தானோ
மூவேழு மன்னனுக்கு மூளை பித்தம் ஏனோ

தோழி 2 :
குறும்பாக பேசேதே என்னாலனை பற்றி
கருநாகமென கிடந்தோம் ஈருடலாக ஒற்றி

தோழி 1 :
கிறங்கடிக்கும் வார்த்தைகளில் மயக்கிவிடாதே
கிறுக்காகி போவேன் காதல் ஆசையினாலே

தோழி 2 :
உன் கேள்வி குழப்பத்திற்கு பதிலை சொன்னேன்
உனக்கது பூரியாது காதல் செந்தேன்

தோழி 1 :
பலநாள் இரவு இருக்க நேற்று ஒருநாள் என்ன
சிலநாள் சில்மிஷங்களின் திருநாளா என்ன

சிவந்த உன் முகம் பழுப்பது எனோ
சில்மிஷமென சொன்ன வார்த்தைகள் தானோ

தோழி 2 :
சிலநாளாய் பேசுவதில்லை என்னாலான்
சிகை சிக்கலுக்குள் சிக்கிய சிங்காரன்

சேலைக்கு எந்நாளும் விடுமுறையே
சேவகன் செய்வது எல்லாம் பலமுறையே

விளக்கு ஏற்றி வைக்க எனை அணைப்பான்
விலக முயன்றாலோ விளக்கணைப்பான்

வேதம் சொல்லாத விதம் சொல்வான்
வேட்டையில் அவனே நிதம் வெல்வான்

இயல் இசை கேட்க்கும் என் நெஞ்சம்
இடி இசை முழங்கும் மர மஞ்சம்

தோழி 1 :
போதுமடி போதுமடி உன்பாட்டு
புணர்ச்சி பூக்கிறது நிப்பாட்டு

கண்ணீரின் காரணத்தை தான் நான் கேட்டேன்
கன்னித்தன்மை போனதயா நான் கேட்டேன்

தோழி 2 :
முடிவு இதுவென நீ கணக்கீட்டாய்
முழுவதும் முடிப்பதற்குள் ஏன் குறுக்கிட்டாய்

அத்தான் ஒருநாள் கொள்ளவில்லை உல்லாசம்
அவர் அருகில் இருக்கும் எந்நாளும் சந்தோசம்

அயல்நாட்டு விடுமுறைக்காலம் முடிந்தது
அத்தான் விடைபெறுவான் என மனம் நொந்தது
கவிபேசிய என் கண்கள் கண்ணீர் சிந்துது

தோழி 1 :
புரிந்துகொண்டேன் இப்போது உன்சோகம்
புயல்கண்ட களமானது தற்போது என்தேகம்

அன்றய தலைவனால் கண்டதெல்லாம் புரட்சி
இன்றய அரசியலால் கண்டதெல்லாம் வறட்சி

மக்களுக்காக வாழ்ந்தது அன்று அரசியல்
மக்குகளால் வீழுது இன்று அரசியல்

மாறும் ஒருநாள் மக்கள் குணம்
மற்றம் பெரும் மக்கள் சினம்
மகிழ்ச்சி காணும் வாழ்க்கை தினம்

பின்பு மன்னனும் இங்கயே தங்கிடுவான்
அன்பு முத்தகங்கள் பல தந்திடுவான்

நம்நாடு விரைவில் காணும் அந்நாள்
நம்மிடமே உள்ளது அந்த பொன்னாள்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Aug-18, 12:26 pm)
பார்வை : 713

மேலே