சுதந்திர காதல்

சுதந்திரம்
எது சுதந்திரம்?
இதுவா சுதந்திரம்
அன்னிய நபரை ஓட ஓட
விரட்டியதா சுதந்திரம்?
அன்னிய எண்ணத்தை வேரோடு
அழிப்பதே சுதந்திரம்
பிள்ளையும் தாயையும் பிரிக்கும்
திருடனை தண்டிப்பதே சுதந்திரம்
பெண்களின் கற்பை சூறையாடும்
மிருகங்களை கொல்வதே சுதந்திரம்
பெற்றோரை தெருவுக்கு தள்ளும்
பிள்ளைகள் மாறுவதே சுதந்திரம்
திருநங்கைகளை சகமனிதராய் மதிப்பதே
திருநங்கையின் சுதந்திரம்
உழவன் விவசாயிக்கு உரிய
கூலி கிடைப்பதே சுதந்திரம்
நல்ல தலைவன் உருவாவதே
இந்த நாட்டுக்கு சுதந்திரம்
மனிதனை மதிப்போம்
நாட்டை தூய்மை படுத்துவோம்
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...