சுதந்திர திருநாள் 71

எழுபத்தி ஒன்று கண்டுவிட்டாய்
ஏறு போன்று நடந்துவிட்டாய்
ஏற்றம் தர மறுத்த அன்னிய
ஏகாதிப்பத்தியம் விரட்டிவிட்டாய்
ஏகாந்த நிலை எப்பொழுது பெறுவாய்
என் தேசம் என் மக்கள்
என்ற நிலை வந்துவிட்டால்
எழுபது எண் என்பது
எண்ணாயிரம் ஆகும்
என் இந்தியத் தாயே
என் பாரத நாடே
ஏற்றம் பெற்று ஏகம்யுணர்ந்து
எஞ்ஞான்றும் ஒன்றெனக் கொள்வாய்
எண்ணலர் யாவரும் அழித்துவிடுவாய்
எப்பொழுதும் பெருமையுடன் நின்று கொள்வாய்

எழுதியவர் : ரமணி (15-Aug-18, 5:19 pm)
சேர்த்தது : ரமணி
பார்வை : 58

மேலே