பாரதி முதல் மருதுபாண்டி வரை அஞ்சலி

சுதந்திர வீரர்களுக்கு அஞ்சலி

கவிதைகளால் சுதந்திர தாகத்தை ஊட்டிய பாரதியே
உயிர்பிரியும் போதும் கொடி காத்த குமரனே
வெள்ளையரை முதலில் எதிர்த்த வீர மங்கை வேலு நாச்சியாரே
ஆங்கிலேய ஆட்சியாளரை சுட்டு உயிர் துறந்த வாஞ்சிநாதனே
இறுதிவரை வரி கட்டாமல் வீர மரணமடைந்த கட்டபொம்மனே
கப்பல் ஓட்டி, சிறையில் செக்கிழுத்த வ.உ.சி செம்மலே
எதிரிக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய தீரன் சின்னமலையே
சிறையில் வாழ்ந்து விடுதலைக்கு வித்திட்ட சுப்பிரமணி சிவாவே
இறக்கும் வரை வெள்ளையனுடன் போரிட்ட வீர மருதுபாண்டியரே
வெள்ளையனை முதலில் எதிர்த்த முன்னோடி புலித்தேவரே
மற்றும் போராடிய அனைவர்க்கும் இந்த எழுபத்து இரண்டாம் ஆண்டில்
சுதந்திர வீர வணக்கங்களை சமர்பிக்கிறேன்
ராரே

எழுதியவர் : ராரே (15-Aug-18, 5:40 pm)
சேர்த்தது : ராரே
பார்வை : 158

மேலே