நான்நீ

வெள்ளி ஓடை நீ!
வெண்மணல் படுக்கை நான்!
காதல் கடலலை நீ!
கைக்கோர்க்கும் கரைமணல் நான்!
மார்கழி மாதம் நீ!
உனைத் தழுவும் சாரல் நான்!
உயிர் உருக்கும் ஊடல் நீ!
அதிலிருக்கும் தேடல் நான்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (17-Aug-18, 1:25 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 216

மேலே