நிவி அவி

அண்ணே, உங்க பொண்ணுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க?
😊😊😊😊😊
எதுக்குடா கேக்கிற?
😊😊😊😊
சும்மா தான் அண்ணே கேட்டேன்.
😊😊😊😊
சும்மா எதுக்குடா கேக்கணும்?
😊😊😊
நான் பெயர் ஆராய்ச்சி பண்ணீட்டிருக்கிறேண்ணே.
😊😊😊
எட்டாம் வகுப்பே தேறாத கழுதை நீ ஆராய்ச்சி பண்ணறீயா?
😊😊😊😊
சும்மா சொல்லுங்கண்ணே.
😊😊😊😊
இல்லடா காசு குடுத்துச் சொல்லறண்டா.
😊😊😊
என்னோட நேரத்தை வீணடிக்காம சொல்லுங்கண்ணே.
😊😊😊😊
சரி தொலஞ்சு போ. எம் பொண்ணுப் பேரு 'நிவி'.
😊😊😊😊
'நிவியா'? 'நீவியா'? இன்னோரு பொண்ணுப் பொறந்தா அதுக்கு 'அவி'-ன்னு பேரு வைப்பீங்களா?
😊😊😊😊
இன்னும் கொஞ்ச நேரம் இங்க நீ இருந்தா உன்னக் கொப்பரையில போட்டு அவிச்சிருவண்டா.
😊😊😊😊
(அங்கிருந்து ஓடிக்கொண்டே)
நிவி. நிவி. நிவி. இதுக்கு அர்த்த்தம் கண்டுபிடிக்காம நான் விடப்போறதில்ல.
■■■■■■■◆■■■■■■■■■■■■■■■■■■
Nivi = where the wind blows down the gap. Native American origin.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
திரைத் ( கலப்படத்) தமிழைத் தவிர்ப்போம். தமிழுணர்வை வளர்ப்போம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (17-Aug-18, 9:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 100

மேலே