அழிக்க முடியா வடு

பச்சைப் பசேல் என்று செழிக்கும் காய்கறித் தோட்டம்
பொன்கொழிக்கும் நெல் வயல்கள்
நெல்வயல்களை சுற்றி நிரை நிரையாய் பனை மரங்கள்
இது மட்டுமல்ல
நீண்டு அகன்ற முற்றத்துடன் கூடிய அழகிய வீடு
நெடு நெடுவென்று வளர்ந்த தென்னை மரங்கள் நிரையுடன்.
முற்றத்தில்
பூ மரங்கள் விதம் விதமாய் அலங்கரிக்கும் வண்ணமயம்
பார்க்க பார்க்க பரவசம் கூடும்.
இக் காட்சி
தம் ரசனைக்கு ஏற்ப பார்ப்போர் மனதை கொள்ளையிடும்
அழகோ அழகு,

ஒவ்வொருவர் இல்லங்களையும், கொஞ்சிக்குலவும் நெல் வயல்களையும்,
பசுமை நிறைந்த தோட்டங்களையும் விட்டுவிட துணிந்தனரா /
இல்லை இல்லை காலத்தின் கொடுமை ,
எல்லா சொத்துக்களையும் இழந்து
அந்நிய நாட்டில் தஞ்சம்,
நிம்மதி கிடைத்தால் போதும் என்று நினைத்தனர் . .
ஆனால் இன்றும் பணத்தை வாரியிறைத்தும்
மனந்தளராது வாழும் தமிழ் நெஞ்சங்களில் ஏதோ ஒரு இனம்புரியாத
கவலை வருத்திக் கொண்டுதான் உள்ளது.

தாயை இழந்த கன்றென வாட்டமுடன் தமிழன் .
தோல்வி நிலையென நினைக்கவில்லை அவன்
தமிழன் மானம் பெரிதென நினைக்கின்றான் .
எவ்வளவு பணம் இருந்தும் அவன் எங்கே இருந்தாலும்
மனதால் என்றும் இப்போது அவன் ஏழைதான்,
வாழ்வை சுமையாக நினைக்கும் காலம் இது .
மறக்க முடியவில்லை ,
நெஞ்சில் அழிக்க முடியாத வடு.

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Aug-18, 11:31 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 243

மேலே