நீ உனது

இமை தழுவி
துயர் துடைக்க மறுக்கும்
தூக்கம்
மீறியும்
துக்கங்களின் பிம்பமாய்
கனவுகள்...
வெட்டியும்
உடல் கிழிக்க துடிக்கும்
நகம்
வெட்டப்படாமல் இருக்க
வேண்டிடும்
மனம்...
கொட்டிய காதலை
கோர்த்திட எண்ணும்
கவி
கோர்த்திட முயலுகையில்
சதி செய்யும்
கண்ணீர் துளிகள்
புதிதாய் மலர
துடிக்கும் மனம்
மீண்டும்
இதழ் மூடவே செய்திடும்
நீ மற்றும் உன் நினைவுகள்...