அப்பா
கடற்கரை மணலில் உம விரல் பிடித்து
நடை பயில
அலை என்னை மோதும் முன்பே
உம் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தேன்!
பள்ளி பருவத்தில் ஐந்தாம் வேதமாய்
உன் பெயரை எழுதினேன்!
சில சமயங்களில் தோழனாக மாறிப்போன
உம்மை நினைத்து நெகிழ்த்தேன்!
பௌர்ணமி நிலவாய் ஒளிவீசிய
உம்மை
அமாவாசையில் தேடுகிறேன்!
நேற்று நிஜத்தில் நிழலாய்
தொடர்ந்த உம்மை
இன்று என்னை தீண்டும் தென்றலில்
சுவாசமாய் தேடுகிறேன்!
நிகழ்கால வெறுமையை போக்க
இறந்த காலமாய் மாறிப்போன
உம்மை அழைக்கிறேன்!
என் தன்மானம் தடுத்த போதிலும்
எனது ஏக்கம் யாவும்
மழலையாக மகிழ்ந்திருக்க வேண்டும்
உமது இருக்கரங்களுக்குள்!