கனவு தேவதை

குண்டு மல்லி சூடிய கூந்தல்
*****காற்றினில் கதை பேச
ரெண்டு கண்கள் இமை மேகத்துள்
*****நிலவின் ஒளி வீச
மின்னல் புன்னகையில்
*****முத்துகள் விழுந்து சிதறும்
மின்சாரப் பார்வையில்
*****நெருங்கிட இளமைப் பதறும்...


தாழை மடல் கை வளையலில்
*****ஏழிசைப் பிறந்து வர
வாழைத் தண்டு கால் கொலுசில்
*****இன்னிசை மயக்கம் தர
சின்ன இடையில்
*****முல்லைப் பூக்கள் அவிழும்
அன்ன நடையில்
*****அசைந்திட மனம் கவிழும்...


தேனில் ஊற வைத்த செவ்விதழ்
*****கொண்ட செம்பூவின் மேனி
வேனில் காலத் தென்றலில் குளிரை
*****அனுப்பும் தேவதைகளின் ராணி
நதியின் வளைவுகளில்
*****இதயம் பாய்ந்து ஓடுகிறாள்
ரதியின் பேரழகில்
*****நெஞ்சம் சாய்ந்து ஆடுகிறாள்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 12:48 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : kanavu thevathai
பார்வை : 2579

மேலே