அந்தநாள் ஞாபகம்---சந்தக் கலித்துறை---

சந்தக் கலித்துறை :

கள்ளும் கனியும் வானொலி இசையால் செவியுண்டு
பள்ளிப் பருவம் பால்மதி ஒளியின் குளிரூட்ட
உள்ளம் உருகும் தாய்மடி துயின்ற சுகமன்று
முள்ளாய் மலராய் முன்றின நினைவில் மனமின்றே...

***************************

கட்டளைக் கலித்துறை :

தொடர்வண்டி நட்பு :
================
பசுந்தோல் புலிகள் பனித்துளி நெஞ்சங்கள் சூழ்ந்திருந்து
பொசுக்குந்தீ மூச்சில் புலனைந்துஞ் சோர்வுற்று வீற்றிருக்க
விசும்பின் துளிவீழ்ந்து விண்நோக்கும் புல்லன்ன வாய்மொழியில்
வசந்தம் தொடங்கும் மனத்திற் புகைரத நட்பினாலே...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 1:50 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 673

மேலே