தோழி
தோழி
நம் அறிமுக நதியின்
ஆரம்ப ஊற்று தாமதமாகவே தழைக்க ஆரம்பித்தாலும்
இதயங்கள் மட்டும் ஏனோ
இனிமையாய் அன்பு எனும் நாணல்களை
செழிக்க வைத்தது
உன் நேசக்கரங்கள் கைபிடித்தபோது
பிரியங்களின் மணிமண்டபத்திற்குள்
மகிழ்ச்சி உலா வந்தோம்
இதோ தேடிவந்த நாகமாய்
நாட்கள் உருமாற
பிரிவின் முகவரிகள் தேடிவந்தன
மனம் எங்கும் ரணம் ரணம்
யார் நினைவுகள் நெருஞ்சியானாலும்
என் நெஞ்செத்தின் மஞ்சத்தில் நிற்பது
உன் சிரித்த முகமும் கபடற்ற பேச்சும்
விளையாட்டு தன்மையும்
உன் விருப்பு எனும் நினைவுகள்
நிறைவேறுதல் எனும் புத்தகத்தில்
அச்சடிக்கப்படவேண்டும்
உன் வாழ்க்கை பாதையெங்கும்
முன்னேற்ற விதைகள் மட்டுமே
விதைக்க படவேண்டும்
நீ என்றென்றும் ஆனந்த நந்தவனத்தில்
நடைபயில அல்லும் பகலும்
ஆண்டவனிடம் வேண்டும் அன்பன்