நட்பு
என்னென்று எழுதுவேன்
இவனை இவனை
இவன் நட்பை
செத்தும் கொடுத்தான்
சீதக்காதி என்பர்
இவனோ தன் சிறுநீரகத்தில்
ஒன்றைத் தந்து
உயிர் நண்பனுக்கு
இவனும் உயிரோடிருந்து-தன்
நண்பணுக்குள் நண்பனாய்
வாழ்கின்றான் , சாகாமல்
வாழும் சீதக்காதியாய்
நண்பர்திலகமாய் நட்பின் இமயமாய்.