நீ எந்தன்
ஞாலம் நீ எந்தன்
வேதம் நீ எந்தன்
கீதம் நீ எந்தன்
ஜீவன் நீ எந்தன்
நீ எந்தன் நீ எந்தன் யாவுமே!
நிலவில்லா இரவினிலும்
வானம் மின்னுதே
மழை தூவா நேரத்திலும்
மண் மணக்குதே
உனை நினைக்கும் ஒரு
நொடியில் உலகம் சுழலுதே
என் உலகம் சுழலுதே!
உனை பிரியும் நொடி வந்தால்
இதயம் உடையுமே
என் இதயம் உடையுமே!
எந்தன் வாழ்வை
மீண்டும் மீண்டும்
தொடங்கி உந்தன்
மடியில் முடிய
ஏக்கம் கொண்டேன்
ஏக்கம் கொண்டேன்
உன்னை கண்ட
நாளில் இருந்து
ஏதோ என்னை
தாக்கம் கண்டேன்
தாக்கம் கண்டேன்
ஏதோ என்னை தாக்கக் கண்டேன்
காதல் என்னில் பூக்கக் கண்டேன்...!!!