சொர்க்கமடி நீ எனக்கு -

அந்திமாலை
அழகு காலை
எந்தன் வானம்
உந்தன் முகம் -அதில்
வானம்பாடி
நானாய் ஆனேன் -தினம்
கானம்பாடி
காதல் செய்தேன்
நந்த வனம்
நறுமண மலர்
அந்த வழியில்
உந்தன் கூந்தல்
உயர்ந்த ரக
கார்மேகப் பந்தல்
அம்மன் திரிசூலம்
கந்தன் திருவேலும்
உந்தன் இருவிழியாம்
எந்தன் இருதயத்தில்
எய்த ஒருகணத்தில்
செய்த சிறுமாற்றத்தில்
பெய்த அருமழையில்
காதலனாய் நான் கரைந்தேன்
இடைவெளியில்லா இருபொழுதின்
வண்ணம் நிறைந்த ஈறிதழாம்
அன்னப் பறவை
அவள் இதழாம்
என் கன்னம் தீண்டும் பூவிதழாம்
அல்லி மொட்டு
காற்றை முட்டும்
மல்லி உந்தன்
மார்பில் மட்டும்
மாமன் எந்தன்
மூச்சு முட்டும்...
கடல் அலையோ
மீன் வலையோ
அவை உந்தன் மெல்டைலியோ
சிக்கிக்கொண்ட -என்
மனமும் மீளவில்லையே
சிறகு தந்தாய்
பறக்கவும் தோன்றவில்லையே
பாதை தந்தாய்
நடக்கவும் தோன்றவில்லையே
காதல் வரைந்த ஓவியமடி
நீ எனக்கு காலமெல்லாம்
காத்திருப்பேன் நான் உனக்கு
போகும் தொடர்வண்டி போலே
எனை நாளும் தாலாட்டுகிறாள்
சாகும் தருவாயிலும்
நான் சாயும் சாமந்தியே!
சொர்க்கமடி நீ எனக்கு......
--கல்லறை செல்வன்