தங்கத்தின் தங்கம்

"தங்கம் எங்கேடா...?"

"பாஸ்.... எனக்கு எதுவும் தெரியாது பாஸ்...."

"இவ்வளவு நாள் கூடவே இருந்துட்டு துரோகம் பண்ண பாக்கிறீயா.... உண்மைய சொல்லு... தங்கத்தை எங்க ஒழிச்சு வச்சுருக்க....??"

"பாஸ்....நான் உண்மையத்தான் சொல்றேன்...என்னைய நம்புங்க பாஸ்.... விடியக்காலையிலேயே உங்க பொண்டாட்டி, அந்த மாரியப்பன் கூட பைக்குல போகும்போதே நினைச்சேன்...இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்னு....எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாஸ்....."

"என்னது.... என் பொண்டாட்டி தங்கத்தை காணோமா......?! தங்கம்....தங்கம்...."

"பாஸ்...நீங்க வேற எந்த தங்கத்தை கேட்டீங்க....?!!"

"டேய்..... சேட்டு முந்தாநாள் அனுப்புன தங்கத்தை எங்கடா....??!!! அய்யோ...அய்யோ....இப்போ நான் எந்த தங்கத்தை தேடுவேன்.... தங்கம்...தங்கம்.....!!"

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Aug-18, 7:30 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 335

மேலே