கனவுத் தலைவா

உனது மண்ணில் பிறந்த
சிறு செடி நான்...

உன் கண்ணில் பட்ட
ஒளி விளக்கு நான்...

உனது
லச்சியம் கண்டு
எனது நாடி துடிக்குமின்று

வறுமையை வெட்டி
உன் வாய்ச சிரிப்பினைக் கொட்டி

என்னைக் கனவுகானச் சொன்ன
மன்னா...!

இன்று...
உன்னை நினைத்தே
கனவும் கலங்கியது...!

அந்தக் கண்ணீர் மேடையிலே
உனது கால்கள்
தவறிய போது

எனது தேசம்
சிதறியது...!

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 4:01 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 4698

மேலே