கவிழ்ந்து கிடக்கிறது
வேண்டாமென்ற டயரும்
வெட்டிப்போட்ட நுங்கும்
வண்டியாயின
விளையாட..
சுழன்றிடும் காலச்சக்கரத்தில்
கழன்றுவிட்டன
சக்கரங்கள்,
மலரும் நினைவுகளாகிவிட்டன
கிராம விளையாட்டுகள்..
கணினியில் பார்த்து
சமாதானப்பட்டுக்கொண்டே
கவிழ்ந்து கிடக்கிறது
இளைய பாரதம்-
கணினியில்,
கைபேசியில்..
தலை நிமிருமா,
நிலை மாறுமா...!